Testing smart link for tamil language after creating smart link

Testing smart link for tamil language after creating smart link

author-image
Raj Rai
Updated On
1 Min read
New Update
alia with ranveer

Testing smart link for tamil language after creating smart link

Listen to this article
00:00 / 00:00

rajasthan | narendra-modi ராஜஸ்தானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், “ஊழல், நபோடிசம் மற்றும் வளைந்து கொடுத்தல் ஆகியவற்றின் அடையாளம் காங்கிரஸ்” என அவர் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், “சாப்ரா கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்கிறார்கள்.

கலவரக்காரர்கள் தவிர, காங்கிரஸ் அமைச்சர்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுடன் வலுவாக, ஆதரவாக நிற்கிறார்கள்.

Advertisment

கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கு, முதலமைச்சருக்கு நெருக்கமான அமைச்சர்கள், சட்டசபை வளாகத்தில் நின்று, குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

ராஜஸ்தானின் மகள்கள் அம்மாநில அரசிடம் பாதுகாப்பு கேட்டபோது, பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என்று அம்மாநில அரசு கூறியது. மகள்களின் கண்ணீரைப் பார்க்க காங்கிரஸ் கட்சியினருக்கு நேரமில்லை” என்றார்.

தொடர்ந்து, “ராஜஸ்தானில் இப்போதெல்லாம் பரபரப்பாக லால் டைரி பேசப்படுகிறது. இந்த ரெட் டைரியில் கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் அரசு உங்கள் தண்ணீரை, காடுகளை, நிலங்களை எப்படி விற்றது என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது” என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடசரா மற்றும் அக்கட்சியின் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர், நவம்பர் 25-ம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெய்ப்பூரில் இன்று வெளியிட்டனர்.

அதில், கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லாக் கடன், சுவாமிநாதன் அறிக்கையின்படி MSPக்கு உத்தரவாதமளிக்கும் சட்டம், மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் ‘சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் தொகை’ தொகை அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

test tag